முகப்புகோலிவுட்

‘அய்யப்பனும் கோஷியும்’ தமிழ் ரீமேக்கில் பார்த்திபனும் சிம்புவும்.?

  | August 14, 2020 01:08 IST
Simbu

சமீபத்தில், பார்த்திபன் ஒரு திரைப்படத்தில் விரைவில் சிம்புடன் சேர்ந்து பணியாற்றுவது போன்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இந்த கொரோனா வைரஸ் பூட்டப்பட்ட காலத்தில் சிம்புவின் பெயர் அதிகமாக அடிப்படுவதைக் காணமுடிகிறது. ஏனெனில் அதிகமான திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்களின் வரவிருக்கும் திரைப்படங்களுக்காக அவரை நோக்கி வருகிறார்கள். வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு' படத்தைத் தவிர, யங் சூப்பர் ஸ்டார் கவுதம் கார்த்திக்குடன் ‘மஃப்டி' தமிழ் ரீமேக்கை புதுப்பிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், மிஷ்கின் இயக்கத்தில் ஸ்ருதி ஹாசன் மற்றும் வடிவேலு ஆகியோருடன் ஒரு திட்டமும் மற்றும் சில சிறந்த இயக்குநர்களுடன் இன்னும் இரண்டு திட்டங்களும் உள்ளதாக தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில், விமர்சன ரீதியாக பெரிதும் பாராட்டப்பட்ட பிளாக்பஸ்டர் ஹிட் மலையாள படமான ‘அய்யப்பனும் கோஷியும்' தமிழ் ரீமேக்கில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சிம்புவை அணுகியிருப்பதாக இப்போது கோலிவுட்டில் பரபரப்பாக தகவல் உள்ளது.

அய்யப்பனும் கோஷியும் அசல் இயக்குனர் சச்சி சமீபத்தில் காலமானார். அவர், இறப்பதற்கு முன்னர் ஒரு நேர்காணலில், அசலில் பிஜு மேனன் ஆற்றிய பாத்திரத்தில் பார்த்திபனைப் பார்க்க விருப்பம் தெரிவித்திருந்தார். சமீபத்தில், பார்த்திபன் ஒரு திரைப்படத்தில் விரைவில் சிம்புடன் சேர்ந்து பணியாற்றுவது போன்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இரண்டையும் இரண்டையும் சேர்த்து பார்க்கையில் சிம்பு மற்றும் பார்த்திபன் ஆகியோர் ‘அய்யப்பனும் கோஷியும்' தமிழ் ரீமேக்கில் அணிசேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமை தயாரிப்பாளர் ‘ஃபைவ் ஸ்டார்' கதிரேசனிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும் இது குறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்பாட்டிற்காக நாம் காத்திருக்க வேண்டியிருக்கும்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com