முகப்புகோலிவுட்

'ராஜா ரங்குஸ்கி' படத்தில் இணைந்த சிம்பு

  | March 28, 2017 15:50 IST
Movies

துனுக்குகள்

 • இப்படத்தை இயக்குநர் தரணிதரனே தயாரிக்கிறார்
 • சிரிஷும், சிம்புவும் நீண்ட நாள் நண்பர்களாம்
 • சிம்புவிற்கென ஸ்பெஷலாக பாடல் எழுதியுள்ளார் மோகன்ராஜன்
'பர்மா, ஜாக்சன் துரை' படங்களுக்கு பிறகு இயக்குநர் தரணிதரன் இயக்கி வரும் படம் ‘ராஜா ரங்குஸ்கி’. இதில் 'மெட்ரோ' புகழ் சிரிஷ் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ‘சித்து +2’ புகழ் சாந்தினி டூயட் பாடி ஆடி வருகிறார்.

‘வாசன் புரொடக்ஷன்’ வுடன் இணைந்து தனது ‘பர்மா டாக்கீஸ்’ நிறுவனம் மூலம் தரணிதரனே இப்படத்தை தயாரித்து வருகிறார். க்ரைம் த்ரில்லரான இதன் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறதாம். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இதற்கு நடிகர் சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளாராம்.

இது குறித்து பேசிய படத்தின் ஹீரோ சிரிஷ், நானும் சிம்புவும் நீண்ட நாள் நண்பர்கள். எனக்கு யுவனின் இசையும், சிம்புவின் குரலும் மிகவும் பிடிக்கும். ஆனால், எனது முதல் படமான ‘மெட்ரோ’வில் சிம்புவை பாடவைக்க முடியவில்லை. ஆகையால், இந்த மேஜிக் ‘ராஜா ரங்குஸ்கி’யில் நடந்துள்ளது. மோகன் ராஜன் எழுதியுள்ள இந்த பாடலின் வரிகளும் சிம்புவிற்காகவே ஸ்பெஷலாக எழுதியதுபோல் இருந்ததால் அவர் லைக்கிட்டு பாடினார்.
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com