முகப்புகோலிவுட்

அண்டா இல்லை குடம் குடமாக சிம்புவுக்கு பாலபிஷேகம்….

  | February 01, 2019 18:01 IST
Vantha Rajavathaan Varuven Celebration

துனுக்குகள்

  • வந்தா ராஜாவாகதான் வருவேன் இன்று வெளியானது
  • சுந்தர் சி இப்படத்தை இயக்கியுள்ளார்
  • இந்த படத்தில் ஆகாஷ் மேகா நடித்திருக்கிறார்
இந்த ஆண்டின் இரண்டாம் மாதத்தின் முதல் நாளை முன்னிட்டு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு 4 படங்கள் விருந்தளிக்கப்பட்டிருக்கிறது.
 
இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் திரைப்படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்', ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் ‘சர்வம் தாளமயம்', ராமின் ‘பேரன்பு', இயக்குநர் முருகேஷின் ‘சகா' போன்ற படங்கள் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 
இந்த படங்களின் விமர்சனங்கள் அனைத்தும் வந்த நிலையில் அனைத்து படங்களையும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.  வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படம் வெளியாகும் போது என்னுடைய படத்தை வேற லெவலில் கொண்டாடுங்கள் என்று  சிம்பு ஏற்கனவே வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.  அந்த வீடியோ வைரலானது.
 
அண்டா அண்டாவாக பால் அபிஷேகம் செய்யுங்கள் என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார். இந்த பிரச்னை வழக்கு வரைக்கும் சென்றது. பிறகு இந்த பிரச்சனை குறித்து பத்திரிகையாளரை சந்தித்த போது மன்னிப்பு கேட்டிருந்தார். இந்நிலையில் இன்று தியேட்டர் ஒன்றில் மாஸ்டர் ராபர்ட் படம் பார்த்துவிட்டு சிம்புவின் பேனருக்கு குடத்தில் பால் அபிஷேகம் செய்துள்ளார். அதன் பின் பேசிய அவர் “படம் குடும்பத்தோடு பார்க்கலாம், காதல், சண்டை காட்சி, பாடல் என அனைத்தும் பிரமாதமாக இருக்கிறது. ரொம்ப நாளைக்கு பிறகு சிம்புவை பார்த்த மாதிரி இருக்கிறது” என்றார்.  
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்