முகப்புகோலிவுட்

அண்டா அண்டாவாக பால் அபிஷேகம். சாம்பிள் காட்டிய சிம்பு ரசிகர்கள்

  | January 28, 2019 14:41 IST
Vantha Rajavathaan Varuven

துனுக்குகள்

  • சிபுவின் சர்ச்சை வீடியோ வைரலானது
  • சிம்பு கட்டளையை ஏற்று ரசிகர்கள் பால் அபிஷேகம்
  • வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படம் வெளிவர இருக்கிறது
சமீபத்தில், நடிகர் சிம்பு வெளியிட்ட அண்டா வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.  அதில் “நான் சமீபத்தில் எனக்கு கட் அவுட் பாலபிஷேகம் எல்லாம் வேண்டாம் என்று ரசிகர்களிடம் கூறினேன். அதற்கு சிலர் எனக்கெல்லாம் அந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்களா? இவர் எதுக்கு இதெல்லாம் பேசுறாரு. அவருக்கு இருக்குற 2,3 ரசிகருக்கு இது தேவையா? ஒரு தப்பு பண்ணுனா திருத்திக்கனும்.
 
அதனால, அந்த 2,3 ரசிகர்களுக்கு சொல்றது என்னனா? இதுவரைக்கும் நீங்க வைக்காத அளவுக்கு பேனர், கட் அவுட் வைக்கிறீங்க. பால் எல்லாம் பாக்கெட்டில் பத்தாது, அண்டாவில் கொண்டு வந்து ஊற்ற வேண்டும். வேற லெவலில் செய்றீங்க. இதுதான் நான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.” என்றிருந்தார்.
 
அண்டாவோட  வந்து கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யணும்னு சொன்ன ஒரு மணி நேரத்திலேயே சிம்புவுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் சங்கத்தினர் கண்டனம், மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடருவோம் என எச்சரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக காவல் துறையில் புகார் ஒன்றையும் அளித்திருந்தனர்.
 
இந்நிலையில், திருச்சியில் சிம்புவின் ரசிகர்கள் அவரது பேனருக்கு அண்டாவில் பால் அபிஷேகம் செய்து அந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோவில் “திருச்சி ரசிகர்கள்  அண்டாவில் பால் எடுத்து ஊற்றி பால் அபிஷேகத்தை நடத்தியுள்ளனர். இது சும்மாதான்  வந்தா ராஜாவாகத்தான் வருவேன் படத்தோட ரிலீஸ் பிப்ரவரி 1 தான் பார்க்க போரிங்க சிம்பு ரசிகர் ஆட்டத்தை” என்ற வாக்கியமும் அந்த பதிவில் இடம்பெற்றுள்ளது. இதே போல் திருப்பூரில் குடம் குடமாக பால் அபிஷேகம் செய்து கொண்டாடி உள்ளனர் சிம்பு ரசிகர்கள்.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்