முகப்புகோலிவுட்

“சிம்பு மீது புகார் கொடுக்கவில்லை” வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்த தயாரிப்பாளர்!

  | October 10, 2019 11:55 IST
Simbu

துனுக்குகள்

  • சிம்பு மீது புகார் என வந்த செய்தி வதந்தி-தயாரிப்பாளர்
  • மப்டி படம் கன்னட படத்தின் ரீமேக்
  • இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளதாக அறிவிப்பு
Chennai: நடிகர் சிம்பு மப்டி படத்தின் படப்பிடிப்புக்கு வரமறுக்கிறார் என்று பரவும் செய்தி பொய்யானது என மறுத்துள்ளார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.

வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை அடுத்து பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார் நடிகர் சிம்பு. சில திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ‘மாநாடு' திரைப்படத்தில் இருந்து சிம்புவை விலக்குவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். காரணம் குறிப்பிட்ட நேரத்தில் படப்பிடிப்பு தொடங்கமுடியாததால் நேரம் கடந்து போகிறது என்கிற அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் வேறு கதாநாயனின் நடிப்பில் ‘மாநாடு' திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்குவார் என்றும் அறிவித்திருந்தார். இந்நிலையில் நடிகர் சிம்பு மீண்டும் "மப்டி" படத்தில் நடிக்க வரமறுப்பதாக கூறி தயாரிப்பாளர் சங்கத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார் அளித்திருப்பதாக செய்தி ஒன்று காட்டுத்தீயாக பரவியது.   இந்த செய்தி கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், ஞானவேல் ராஜா தரப்பில் இந்த செய்திகள் வதந்தி என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே மப்டி படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவு பெற்ற நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் நடக்க இருப்பதாக ஞானவேல் ராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சமீபத்தில்தான் நடிகர் சிம்பு வெளிநாடு சென்று திரும்பி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்