முகப்புகோலிவுட்

“மாநாடு” படத்திற்கு தயாரான சிம்பு! வைரலாகும் வீடியோ!

  | July 03, 2019 16:24 IST
Simbu

துனுக்குகள்

  • இயக்குநர் வெங்கட் பிரபு இப்படத்தை இயக்குகிறார்
  • யுவன்சங்கர் ராஜா இப்படத்திற்கு இசை அமைக்கிறார்
  • இம்மாத இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது
சுந்தர்.சி இயக்கத்தில்  ‘வந்தா ராஜாவாதான் வருவேன்'படதிற்கு பிறகு சிம்பு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு' படத்தில் நடிக்கவிருக்கிறார்.
 
இப்படத்தின் படப்பிடிப்பு ஜுன் மாதம் தொடங்கும் என்று வெங்கட் பிரபு நம்மிடம் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். ஆனால் சில காரணங்களால் படப்பிடிப்பு தள்ளி போனது. ‘வந்தா ராஜாவாதான் வருவேன்'படத்திற்கு பிறகு சிம்பு உடல் எடையை குறைக்க இரண்டு மாதங்களுக்கு மேல் லண்டனில் தங்கியதாக கூறப்பட்டது. இதன் காரணமாகவே படப்பிடிப்பு தள்ளி போனது என்று கூறப்பட்டது. இந்நிலையில் ஞானவேல்ராஜா தயாரிப்பில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து கன்னட படமான மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். கவுதம் கார்த்திக் இது தொடர்பான புகைப்டங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு சிம்புவை புகழ்ந்து தள்ளியிருந்தார்.
 
இந்நிலையில் இந்த மாத இறுதியில் மாநாடு படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை உறுதி செய்யும் விதமாக  சிம்பு மாநாடு படத்தின் திரைக்கதையை படிப்பதுபோல வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்