முகப்புகோலிவுட்

குமரவேலன் இயக்கும் 'சினம்' - போஸ்ட்டரை வெளியிட்ட கதையின் நாயகன்..!!

  | July 06, 2020 10:04 IST
Arun Vijay

துனுக்குகள்

 • மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து கடந்த
 • இதற்கிடையில் என்.ஆர்.ஜி குமரவேலன் இயக்கும் திரைப்பத்தில் நடிக்கத்
 • இந்த படத்தில் இருந்து ஒரு போஸ்டர் ஒன்றை நடிகர் அருண் விஜய்
மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து கடந்த மார்ச் மாதம் வெளியான திரைப்படம் தடம். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு பிரபாஸ் நடித்த 'சாஹோ' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் அருண் விஜய். இதனைத்தொடர்ந்து அப்போது அருண் விஜய், மாஃபியா, அக்னி சிறகுகள், பாக்ஸர், ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். 

இதற்கிடையில் என்.ஆர்.ஜி குமரவேலன் இயக்கும் திரைப்பத்தில் நடிக்கத் தொடங்கினார். இப்படத்திற்கு 'சினம்' எனத் தலைப்பிடப்பட்ட நிலையில், இப்படத்தின் டைட்டில் போஸ்டரை நடிகர் கார்த்தி கடந்த ஆண்டு வெளியிட்டார். அருண் விஜய் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பல்லக் லால்வானி நடிக்கிறார். அருண் விஜயின் தந்தை விஜயகுமார் தயாரிக்கும்  இப்படத்துக்கு ஷபீர் இசையமைக்கிறார். 

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இருந்து ஒரு போஸ்டர் ஒன்றை நடிகர் அருண் விஜய் வெளியிட்டுள்ளார். கடந்த ஓராண்டு காலமாக இந்த படம் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com