முகப்புகோலிவுட்

'சாய் தன்ஷிகா நடிப்பில் சினம்' - சர்வதேச திரைப்பட விழாவில் விருதினை பெற்ற குறும்படம்.!

  | September 17, 2020 11:23 IST
Toronto T

துனுக்குகள்

 • தனித்துவமான பல நடிகர் நடிகைகளை நமது தமிழ் சினிமா மக்களுக்கு
 • பாலாவின் பரதேசி, வசந்த பாலனின் அரவான் போன்ற பல படங்களில்
 • சினம் என்ற குரும்பப்படம் தற்போது சர்வதேச விழாவில் சிறந்த
தனித்துவமான பல நடிகர் நடிகைகளை நமது தமிழ் சினிமா மக்களுக்கு கொடுத்துள்ளது என்றால் அது மிகையல்ல. அந்த வகையில் ஷாம் நடிப்பில் 2006ம் ஆண்டு வெளியான 'மனதோடு மழைக்காலம்' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை தான் சாய் தன்ஷிகா. பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்த இவர் 2009ம் ஆண்டு பிரபல நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பேராண்மை என்ற படத்தின் மூலம் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பாலாவின் பரதேசி, வசந்த பாலனின் அரவான் போன்ற பல படங்களில் இவருடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. எந்த கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்கும் இவருடைய வித்யாசமான நடிப்பு வெகுவாக பலரால் பாராட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 2016ம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான கபாலி படத்தில் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டாரின் மகளாக வந்து அசத்தினார். 

இந்நிலையில் பல வித்தியாசமான கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வரும் சாய் தன்ஷிகா தற்போது மக்கள் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள லாபம் படத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் நடிப்பில் உருவான சினம் என்ற குரும்பப்படம் தற்போது சர்வதேச விழாவில் சிறந்த குறும்படத்திற்கான விருதை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com