முகப்புகோலிவுட்

காணாமல் போனதாக கூறப்பட்ட பாடகி சுசித்ரா கண்டுபிடிப்பு!

  | November 15, 2019 12:42 IST
Suchi

துனுக்குகள்

 • சுச்சி லீக் பரபரப்பை ஏறப்டுத்தியவர் இவர்
 • இவர் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது
 • பின்னணி பாடகராக 50-கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்
காணாமல் போனதாக கூறப்பட்ட சுசித்ரா விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
 
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகராக அறிமுகமான சுசித்ரா கடந்த 2013ம் ஆண்டு வெளியான ஜே.ஜே., ‘ஆயுத எழுத்து', ‘பலே பாண்டியா' உள்ளிட்ட படங்களில் நடிக்கவும் செய்தார்.
 
பின்னணி பாடகராக 50-கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். தமிழ் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிப் படங்களிலும் பாடல்களை பாடிவந்த இவர் சிவ காலம் பெரும் சர்ச்சையில் சிக்கினார்.  சுச்சி லீக் என்கிற பெயரில் சினிமா பிரபலங்களின் லீலை வீடியோக்கலை வெளியிட்டு தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.  பின் இவர் மனஉளைச்சலில் இருப்பதாக செய்திகள் வெளியானது. பல்வேறு விமர்சனங்கள் இவர் மீது எழுந்தது.
 
இவர் காணாமல் போய்விட்டதாக அவரது தங்கை சுனிதா அடையாறு காவல் நிலையத்தில் கடந்த 11ம் தேதி புகார் அளித்தார். இது பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது சுசித்ராவின் அலைபேசி எண்ணை வைத்து அவர் அடையாறில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் இருப்பது தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினரிடம் சுசித்ரா கூறுகையில், தான் காணாமல் போனது பொய் என்றும். மனநிலை சரியில்லை என்று தன்னை வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் சேர்த்ததால் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com