முகப்புகோலிவுட்

'T-Shirtல் கலக்கும் லால்எட்டன்..!!' - Throwback புகைப்படம் வெளியிட்ட சிபி சத்யராஜ்

  | May 23, 2020 12:47 IST
Mohanlal

துனுக்குகள்

 • 1980ம் ஆண்டு பிரபல இயக்குநர் பாசில் இயக்கத்தில் வெளியான
 • விஜயுடன் ஜில்லா சூர்யாவுடன் காப்பான் உள்ளிட்ட படங்கள்
 • throwback புகைப்படம் ஒன்றை அவர் பிறந்த நாள் அன்று தனது இன்ஸ்டா
கடந்த மே 21ம் தேதி தனது 60வது பிறந்தநாளை கொண்டாடினர் பிரபல மலையாள நடிகர் 'லால்எட்டன்' என்று அனைவரும் அன்போடு அழைக்கும் மோகன்லால். மலையாள சினிமாவை பொறுத்தவரை இவர் தவிர்க்க முடியதா ஒரு நடிகராக வளம் வருகின்றார். 1980ம் ஆண்டு பிரபல இயக்குநர் பாசில் இயக்கத்தில் வெளியான     Manjil Virinja Pookkal என்ற மலையாள படத்தின் மூலம் இவர் திரையுலகில் அறிமுகமானார். தமிழில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் படத்தின் மூலம் அறிமுகமானார். கமலுடன் உன்னைப்போல் ஒருவன், விஜயுடன் ஜில்லா சூர்யாவுடன் காப்பான் உள்ளிட்ட படங்கள் அவர் தமிழில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் கடந்த வியாழன் அன்று தனது பிறந்தநாளை கொண்டாடிய அவருக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். உலக நாயகன் கமல் ஹாசன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் என்னுடைய தம்பி மோகன்லாலுக்கு வாழ்த்துக்கள் என்று கூறினார். 

இந்நிலையில் பிரபல நடிகர் சிபி சத்யராஜ், மோகன்லால், தனது தந்தை சத்தியராஜ் மற்றும் நடிகர் மமூட்டி உள்ளிட்டோர் இணைந்து எடுத்துக்கொண்ட throwback புகைப்படம் ஒன்றை அவர் பிறந்த நாள் அன்று தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் T-Shirt போட்டுக் கொண்டு அருமையாக போஸ் கொடுத்துள்ளார் மோகன்லால்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com