முகப்புகோலிவுட்

"சங்கர் அண்ணணுக்கு தமிழில்தான் சொன்னேன்" ரோபோ சங்கரை விளாசிய சிவகார்த்திகேயன்!

  | May 14, 2019 16:26 IST
Mr Local

துனுக்குகள்

  • ராஜேஷ் இப்படத்தை இயக்கி இருக்கிறார்
  • ஹிப்பாப் தமிழா இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்
  • ரோபோ சங்கர், சதீஷ் இப்படத்தில் நடித்துள்ளனர்
இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில்
உருவாகி இருக்கும் படம் 'மிஸ்டர் லோக்கல்'. இந்த படம் வரும் 17ம் நாள் நாடு முழுவதும் திரைக்கு வரவிருக்கிறது.
 
இதனைத் தொடர்ந்து இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடை பெற்றது. இதில் பேசிய நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர்,

"பத்திரிகையாளர்களுக்கு மட்டும் படங்கள் பிரத்யோகமாக திரையிடப்படும், அப்போது பத்திரிகையாளர்கள் யாரும் காமெடி காட்சிகள் வரும் போது சிரிப்பதே இல்லை. எனக்கு அது வருத்தமாக இருக்கிறது. நடிகர்கள், இயக்குநர்கள் மேடைக்கு வரும் போது கை தட்டலாம் அதையும் செய்வதில்லை அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை. நான் இதை ஒரு குழந்தையாகதான் கேட்கிறேன்" என்றார்.

இவரைத் தொடர்ந்து பேசிய சிவகார்த்திகேயன், இதற்கு விளக்கம் அளிக்கும் விதத்தில் "பத்திரிகையாளர்கள் பல்வேறு திரைப்படங்களை பார்க்கிறார்கள், தினமும் அவர்களுடைய வேலையாக அது மாறிவிட்டதால் அவர்கள் தங்களது உணர்வுகளை வெளிபடுத்த முடியாமல் இருக்கிறார்கள் என்றார்.  ரோபோ சங்கர் அண்ணணுக்கு நான் தமிழில்தான் சொன்னேன், வந்திருப்பவர்கள் ரசிகர்கள் இல்லை பத்திரிகையாளர்கள் என்று மறுபடியும் குழந்தைனு சொன்னீங்கனா..." என்று கிண்டல் அடித்துவிட்டு திரைப்படம் பற்றி பேசினார்.
"இந்த படம் முழுக்க முழுக்க எண்டர்டெயின்மெண்ட் படம். சின்ன,சின்ன் செய்திகள் படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது, எல்லோரும் கொண்டாடும் படமாக இந்த படம் இருக்கும் என்று நம்புகிறேன்" என்றார்.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்