முகப்புகோலிவுட்

சூர்யா, கார்த்தியை தொடர்ந்து சிவகார்த்திகேயன்..! FEFSI-க்கு ரூ.10 லட்சம் நன்கொடை..!

  | March 24, 2020 13:11 IST
Fefsi

சிவகார்த்திகேயன் தற்போது ‘டாக்டர்’, ‘அயலான்’ திரைப்படங்களில் நடித்துவருகிறார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன, மேலும் திரைப்படங்கள், தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் விளம்பரங்களின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக வேலையில்லாமல் இருக்கும் FEFSI உறுப்பினர்களுக்கு உதவுமாறு FEFSI தலைவர் ஆர்.கே.சல்வமணி நேற்று, நடிகர்கள், நடிகைகள் மற்றும் திரைப்பட சகோதரத்துவத்திடம் ஒட்டுமொத்தமாக வேண்டுகோள் விடுத்தார்.

அந்த வேண்டுகோளுக்குப் பிறகு சில மணிநேரங்களில், மூத்த நடிகர் சிவகுமார் மற்றும் அவரது மகன்கள் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து ரூ. 10 லட்சம் நன்கொடை வழங்கினர். இப்போது சமீபத்திய தகவல்களின்படி, நடிகர் சிவகார்த்திகேயனும் FEFSI உறுப்பினர்களின் நலனுக்காக ரூ .10 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.

தொலைக்காட்சி தொகுப்பாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய சிவகார்த்திகேயன், தமிழ் சினிமா துறையில் ஒரு சிறந்த நடிகராகத் தன்னை நிலைநாட்டிவருகிறார், மேலும் அவர் தொடர்ந்து பிளாக்பஸ்டர் படங்களை வழங்கி வருகிறார். கடைசியாகா அவரது ஹீரோ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக ‘டாக்டர்', ‘அயலான்' திரைப்படங்களில் நடித்துவருகிறார்.


    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com