முகப்புகோலிவுட்

சிவகார்த்திகேயன் வெளியிட்ட மொஷன் போஸ்டர்..!

  | January 18, 2020 14:07 IST
Plan Panni Pannanum

துனுக்குகள்

  • பிளான் பண்ணி பண்ணனும் படத்தை பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ளார்.
  • இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
  • இப்படத்தில் ரியோ மற்றும் ரம்யா நம்பீசன் இணைந்து நடித்துள்ளனர்.
ரியோ - ரம்யா நம்பீசன் நடித்துள்ள ‘பிளான் பண்ணி பண்ணனும்' படத்தின் மோஷன் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

‘பானா காத்தாடி' மற்றும் ‘செம்ம போத ஆகாதே' படங்களுக்குப் பிறகு பத்ரி வெங்கடேஷ் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் உருவாகும் 3-வது திரைப்படம் ‘பிளான் பண்ணி பண்ணனும்'. இப்படத்தின் முன்னணி கதாப்பாத்திரங்களில் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படப்புகழ் ரியோ ராஜ் மற்றும் நடிகை ரம்யா நம்பீசன் இணைந்து நடித்துள்ளனர்.

மேலும் எம். எஸ். பாஸ்கர், சந்தான பாரதி, ரேகா, பாலசரவணன், மாரிமுத்து, விஜி சந்திரசேகர், ரோபோ சங்கர், முனீஷ்காந்த், ஆடுகளம் நரேன், பழைய ஜோக் தங்க துரை, மதுரை சுஜாதா என தமிழின் முக்கியமான கலைஞர்கள் இப்படத்தில் பங்குகொண்டுள்ளார்கள். ராஜேஷ் குமார் மற்றும் L. சிந்தன் இணைந்து Positive Print Studios சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார்கள்.
இப்படத்துக்கு B.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஷாம் RDX படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும், சரவணன் கலை இயக்கம் செய்துள்ளார். நடன அமைப்பை கல்யாண் அமைக்க, ஸ்டன்னர் ஷாம் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றியுள்ளார். AC கருணாமூர்த்தி கதை எழுத RK வசனம் எழுதியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகளில் உள்ளது.
இந்நிலையில், இப்ப்டத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு நேற்று வெளியிட்டார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்