முகப்புகோலிவுட்

‘வால்டர்’ ட்ரைலரை வெளியிட்ட ‘வருத்தப்படாத வாலிபர் சங்க’ தலைவர்..!

  | February 20, 2020 17:55 IST
Sibi Sathyaraj

இப்படத்தின் பாடல்களை ஓய்வுபெற்ற முன்னாள் DGP Walter Dawaram IPS வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

சிபி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘வால்டர்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலரை நடிகர் சிவ கார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

யு. அன்பரசன் இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடிக்கும் திரைப்படம் ‘வால்டர்'. சிபி சத்யராஜ் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் இப்படம் ஆக்‌ஷன் க்ரைம் த்ரில்லர் கதையாகும். இப்படத்தை 11:11 ப்ரொடக்ஷன்ஸ் பேனரில் ஷ்ருதி திலக் தயாரிக்கிறார்.

இப்படத்தில் நட்டி நடராஜன் மற்றும் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் ஷிரின் கன்ச்வாலா, சனம் ஷெட்டி, பாவா செல்லதுரை, அபிஷேக் வினோத் மற்றும் சார்லி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்துக்கு ராசமதி ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா படத்தொகுப்பு செய்கிறார். மேலும், விக்கி இப்படத்தின் சண்டைக் காட்சிகளை இயக்க, தர்ம பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் ஆடியோ லான்ச் விழா சமீபத்தில் நடைபெற்றது. இப்படத்தின் பாடல்களை ஓய்வுபெற்ற முன்னாள் DGP Walter Dawaram IPS வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இப்படம் வரும் மார்ச் 6-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலர் வெளியாகியுள்ளது. அதனை நடிகர் சிவ கார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com