முகப்புகோலிவுட்

இயக்குநர் நெல்சன் திலீப் குமாரிடம் வாய்ப்பு கேட்கும் சிவகார்த்திகேயன்!

  | July 08, 2019 18:02 IST (Andorra)
Sivakarthikeyan

துனுக்குகள்

  • சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்
  • இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார்
  • கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவர் நெல்சன் திலீப் குமார்
கோலமாவு கோகிலா படத்தைத் தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அடுத்து இயக்கவிருக்கும் அடுத்த படத்தின் நடிகர் நடிகை தேர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் நடிக்க விருப்பம் உள்ளவர்கள் ஏற்கனவே நடித்த மாதிரிகளை தன்னுடைய இ-மெயிலுக்கு அனுப்புங்கள் என்கிற விளம்பர போஸ்டர் ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
 
இதற்கு பதில் அளிக்கும் விதமாக அவரது நண்பர்கள் பலர் இந்த பதிவுக்கு காமெடியாக பதிவு செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் “நான் ஏற்கனவே மெயில் அனுப்பி இருக்கிறேன், எந்த ரெஸ்பான்சும் இல்லை” என்று பதிவிட்டிருக்கிறார். இதற்கு பதிலலித்து இருக்கும் நெல்சன்
‘ஷுடிங் அப்போ நீ எந்த கன்ட்ரீல இருப்பனே தெரியாதே டா' என்று பதிவிட்டிருக்கிறார். இதற்கு பதிலலித்திருக்கும் சிவகார்த்திகேயன்,
 
‘நெல்சன் சார் நான் இந்த நாட்டிலேதான் இருப்பேன். நான் என்னுடைய ஆடிசன் சாம்பிலை உங்களுக்கு அனுப்பியுள்ளேன். பார்த்து சொல்லவும்”  என்று ஒரு வீடியோவையும் இணைத்திருக்கிறார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.  
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்