முகப்புகோலிவுட்

கெத்தான புகைப்படத்தை பகிர்ந்த ‘டாக்டர்’; மாறி மாறி ஜாலியாக கலாய்த்துகொண்ட நெல்சன்-சிவகார்த்திகேயன்!

  | June 24, 2020 17:45 IST
Sivakarthikeyan

"கமண்ட்ட போட்டோமா, ரெண்டு கலாய் கலாய்ச்சமா, கடைய சாத்திட்டு போய், காப்பி தண்ணிய குடிச்சமானு இருங்க இயக்குநரே"

கடைசியாக பி.எஸ். மித்ரன் இயக்கிய ‘ஹீரோ' திரைப்படத்தில் திரையில் காணப்பட்ட சிவகார்த்திகேயன், அதையடுத்து ஆர். ரவிகுமார் இயக்கத்தில் ‘அயலான்' மற்றும் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘டாக்டர்' ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

இதில், டாக்டர் திரைப்படத்தின் இறுதி அட்டவணை கோவாவில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்த படம் கிறிஸ்துமஸ் 2020 வெளியீட்டை இலக்காகக் கொண்டுள்ளதாகவும் கடந்த மாதம் தகவல்கள் வெளிவந்தன. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன், வினய், மற்றும் யோகி பாபு ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். மேலும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

7ouu4hj8

இந்த லாக்டவுனில் கஷ்டப்படும் சிலருக்காக உதவிகளை வழங்கியதுடன், தனது ரசிகர்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் கொரோனா குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்திவந்தார். தற்போது வீட்டில் தனது குடும்பத்துடன் பாதுகாப்பாக நேரத்தை கழித்துவரும் அவர், “மீண்டும் போற போக்குல ஒரு போட்டோஷூட்” என்ற தலைப்பில் தனது அட்டகாசமான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

அந்த ஃபோட்டோவுக்கு லைக்ஸ் & கமண்ட்ஸ் குவிந்து வரும் நிலையில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அந்த புகைப்படத்துக்கு “போற போக்குல பண்ணதுக்கே இப்படினா??? அப்போ பிளான் பண்ணி பண்ணிருந்தா வேற மாரி போலயே.., ஸ்டைலா இருக்கீங்களே” என கமண்ட் செய்தார்.

mobshle

அதோடு முடியவில்லை, இருவருக்கும் இடையில் சிறிய ஜாலியான உரையாடலே நடந்துள்ளது. அதில், 

“SK : உங்க பட ஹீரோல பாஸ், ஸ்டைலா தான் இருப்பாரு…
Nelson : பேச்சுவார்த்தையை முடிச்சிகிறேன். இதுக்கு நான் என் வடிவேலு காமெடியே போய் பாகுறேன்..
SK : யா ப்ளீஸ் கோ.. எப்போ பாத்தாலும் இன்ஸ்டா ல.. இங்க நிங்க என்ன பண்றீங்கனு எனக்கு தெரியும்.. கோ மேன் கோ..
Nelson : யாரு நாங்க??? தம்பி போங்க தம்பி, நீங்க போஸ்ட் போட்டா கமண்ட் போட தான் இன்ஸ்டால சுத்திகிட்டு இருக்கோம்… என்னலாம் போய் தப்பா பேசுறீங்க…
SK : கமண்ட்ட போட்டோமா, ரெண்டு கலாய் கலாய்ச்சமா, கடைய சாத்திட்டு போய், காப்பி தண்ணிய குடிச்சமானு இருங்க இயக்குநரே.. இன்ஸ்டாலயே சுத்திகிட்டு திரிய கூடாது..
Nelson : ஓ அப்போ நாங்க தெருலயும் சுத்தகூடாது?? இன்ஸ்டாலயும் சுத்தகூடாது??
SK : யாயா.. என்ன யா கூடகூட பேசுராய்ங்க.. எல்லாத்துக்கும் பதில் வச்சிருக்காரு நம்ம வேர ஆள பாப்போம்..” எனக் கூற, நெல்சன் வணக்கம் வைத்துவிட்டு செல்ல, ஒரு வழியாக அவர்களின் ஜாலியான உரையாடல் முடிந்தது.

இந்த புகைப்படம் ரசிகர்களை ஈர்த்த அளவிற்கு சிவகார்த்திகேயனுக்கே உரிய ஸ்டைலில் ஜாலியாக கலாய்த்து பேசிய இந்த உரையாடல் ரசிகர்களைக் கவர்ந்தது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com