முகப்புகோலிவுட்

அதிரடியாக ப்ரொமோஷனில் இறங்கிய சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படக்குழு..! இன்று Whatsapp Sticker வெளியீடு...!

  | December 10, 2019 11:18 IST
Hero Movie Promotion

துனுக்குகள்

 • சிவகார்த்திகேயனின் ஹீரோ திரைப்படம் இம்மாதம் 20-ஆம் தேதி வெளியாகிறது.
 • இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
 • இப்படத்தை பி.எஸ் மித்ரன் இயக்கியுள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ திரைப்படத்திற்கான ப்ரொமோஷன் அட்டவணை வெளியாகியுள்ளது.

பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஹீரோ. இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மேலும், இப்படத்தில் விவேக், பாலிவுட் நடிகர் அபய் தியோல் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கூடுதலாக ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்துக்கு ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு செய்கிறார்.

இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்திலிருந்து ‘ஓவரா ஃபீல் பன்னுரேன்' எனும் மூன்றாவது பாடல் நேற்று வெளியியானது.
வரும் டிசம்பர் 20-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்திற்கான ப்ரொமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. ஹாலிவூட் திரைப்படமான ‘பேட் மேன்' திரைப்படத்தைப் போலவே, இப்படத்துக்கு உயரமான கட்டிடங்களில் ஹீரோ மாஸ்க் சின்னம் பிரதிபலிக்கப்பட்டது. ரயில்களிலும் இப்படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. மேலும், இப்படத்தின் ப்ரொமோஷனுக்காக பல திடங்களை வைத்துள்ள படக்குழு, கால அட்டவணையிட்டு வேலைசெய்து வருகிறது. Whatsapp Sticker மற்றும் facebook filter வெளியீடு, ட்ரைலர் வெளியீடு என அடுத்தடுத்து அப்டேட்டுகள் அதில் உள்ளது.
sk1uflgg


  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com