முகப்புகோலிவுட்

சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ டைட்டில் ட்ராக் வெளியானது..!

  | November 29, 2019 20:29 IST
Sivakathikeyan

துனுக்குகள்

 • ஹீரோ திரைப்படத்தை P.S. மித்ரன் இயக்கியுள்ளார்.
 • இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
 • இப்படம் டிசம்பர் 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ திரைப்படத்திலிருந்து இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.

பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஹீரோ. இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடொயோஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மேலும், இப்படத்தில் விவேக், பாலிவுட் நடிகர் அபய் தியோல் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கூடுதலாக ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்துக்கு ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு செய்கிறார்.

இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்திலிருந்து ரோகேஷின் வரிகளில் ஷியாம் விஸ்வநாத் பாடிய ‘மால்டோ கித்தாபுல' எனும் முதல் சிங்கிள் ட்ராக் சமீபத்தில் வெளியாகி வைரலானது. அதேபோல், சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ உடை மற்றும் முகமூடியோடு இருக்கும் புதிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.
இப்படம் வரும் டிசம்பர் 20-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது இப்படத்திலிருந்து டைட்டில் பாடல் லிரிக்கல் வீடியோவாக வெளியாகியுள்ளது. பா. விஜய் எழுதியுள்ள, ‘சக மனிதனை மதிக்கும்'எனத் தொடங்கும் இப்பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார். இந்தப்பாடலில் உள்ள ராப் வரிகளை ஆர்யன் தினேஷ் மற்றும் அப்பி சைமன் பாடியுள்ளனர்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com