முகப்புகோலிவுட்

10 மில்லியனைக் கடந்த ‘செல்லம்மா’ பாடல்.! ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த SK.!

  | July 25, 2020 23:19 IST
Sivakarthikeyan

சிவகார்த்திகேயனின் வரிகளில் அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர்

கடந்த 2019ம் ஆண்டு பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் இரண்டு படங்கள் தான் அயலான் மற்றும் டாக்டர். இதில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் டாக்டர் திரைப்படத்தின் இறுதி அட்டவணை கோவாவில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்த படம் கிறிஸ்துமஸ் 2020 வெளியீட்டை இலக்காகக் கொண்டுள்ளதாகவும் கடந்த மாதம் தகவல்கள் வெளிவந்தன.

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன், வினய், மற்றும் யோகி பாபு ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். மேலும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ‘டாக்டர்' ஒரு மெடிக்கல் த்ரில்லர் அல்ல, மாறாக இது மிகவும் வேடிக்கை நிரம்பிய பொழுதுபோக்கு படமாக இருக்கும் என இப்படத்தின் இயக்குநர் நெல்சன் திலிப்குமார் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

முன்னதாக அறிவித்தபடி, இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘செல்லம்மா' பாடல் மற்றும் அதன் லிரிக்கல் வீடியோ அண்மையில் வெளியாகி செம வைரலானது.

சிவகார்த்திகேயன் பாடல் வரிகளில் அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இணைந்து பாடியுள்ள இந்த அட்டகாசமான பாடல், இப்போது youtube தளத்தில் 10 மில்லியன் வியூஸ்களை (1 கோடி வியூஸ்) தாண்டி கலக்கிவருகிறது. அதற்காக  இன்று ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் சிவகார்த்திகேயன்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com