முகப்புகோலிவுட்

சிவகார்த்திகேயன் எழுதிய பாடல் அருமை - நடிகர் விக்ரம் புகழாரம்!

  | October 23, 2019 12:25 IST
Sivakarthikeyan

துனுக்குகள்

  • அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் இப்படம்
  • இப்படத்தின் மூலம் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகிறார்
  • ரதன் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்
விக்ரம் மகன் துருவ் நடித்துள்ள 'ஆதித்ய வர்மா' படத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் எழுதியுள்ளார். 

தெலுங்கு திரைப்படங்களில் உதவி இயக்குநராக இருந்த கிரிசையா  தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘அதித்யா வர்மா'. இப்படத்தின் மூலம் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியா பனிதா சந்து நடித்துள்ளார். ரதன் இசையில் பாடல்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அப்போது நடிகர் விக்ரம் பேசுகையில், இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் எழுதி உள்ளதாகவும், இந்தப் பாடலில் எந்த மாற்றமும் செய்யாமல் உருவாகியுள்ளதாகவும் கூறினார். மேலும் பாடல் மிகவும் அருமை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தெலுங்கில் கடந்த ஆண்டு வெளியான ‘அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்