முகப்புகோலிவுட்

சம்பளத்தை 50% குறைத்துக்கொண்ட SKவின் ’அயலான்’ பட நடிகை.!

  | July 07, 2020 00:21 IST
Ayalaan

துனுக்குகள்

 • ரகுல் தற்போது சங்கர்-கமல்ஹாசனின் ‘இந்தியன்-2'வில் நடிக்கிறார்.
 • மேலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘அயலான்' படத்தில் நடிக்கிறார்.
 • அவரது தற்போதைய சம்பளம் ரூ. 1.5 கோடி எனக் கூறப்படுகிறது.

நடிகை ரகுல் ப்ரீத் சிங் டோலிவுட் மற்றும் கோலிவுட்டில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். தமிழில் எச். வினோத் இயக்கத்தில் கார்த்தியுடன் ‘தீரன் அதிகாரம் ஒன்று', செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவின் ‘என்.ஜி.கே' போன்ற சில பிரபலமான திரைப்படங்களில் நடித்து தமிழில் ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் பூட்டுதல் ஆகியவற்றின் விளைவாக திரைப்பட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு, திரைப்படங்களின் திரையரங்க வெளியீடுகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன, தயாரிப்பாளர்கள் தங்களுக்கு முன்னால் உள்ள நிதி சிக்கல்களுடன் ஒரு கடினமான நேரத்தை எதிர்கொண்டுள்ளனர். திரையரங்குகள் எப்போது திறக்கப்படும், மல்டிபிளக்ஸ்கள் இயங்கும் என்று தெரியாத நிலை உள்ளது. அப்படி திறக்கப்பட்டாலும், பார்வையாளர்கள் அரங்குகளுக்கு வரத் துணிவார்களா என்பதும் நிச்சயமற்றது.

இந்த நெருக்கடி சூழ்நிலையில் வனிக ரீதியாக பெருமளவில் நஷ்டங்களை சந்தித்துவரும் தயாரிப்பாளர்களுக்கு உதவும் முயற்சியாக, பல நடிகர் நடிகைகள் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள முன்வந்து ஒப்புதல் அளித்துள்ல நிலையில், தற்போது நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது சம்பளத்தினை 50 சதவீதமாகக் குறைத்துக்கொண்டுள்ளார். அது கிட்டதட்ட ரூ. 75 லட்சம் எனக் கூறப்படுகிறது.

ரகுல் தற்போது சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனின் ‘இந்தியன்-2' மற்றும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘அயலான்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக இயங்கிவரும் அவர் தனது உடற்பயிற்சி, யோகா, தம்பியுடனான விளையாட்டு, சமூகவலைதள சவால்கள் என வழக்கமாக வீடியோக்களையும் புகைப்படங்களையும் பதிவிட்டு, ரசிகர்களுடன் இணைப்பிலேயே இருக்கிறார்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com