முகப்புகோலிவுட்

ஏலியனுடன் குச்சி மிட்டாய் சாப்பிடும் சிவகார்த்திகேயன்..! வெளியானது ‘அயலான்’ ஃபர்ஸ்ட் லுக்..!

  | February 17, 2020 19:17 IST
Ayalaan First Look

இன்று காலை, KJR Studios தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கோலிவுட்டின் ‘ப்ரின்ஸ்' என அழைக்கப்படும் சிவகார்த்திகேயனின் 14-வது திரைப்படம் ‘அயலான்'. "Ayalaan - Destination : Earth" என தலைப்பிடப்பட்டுள்ள இப்படம் ஏலியன் தொடர்பான கதையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸுடன் இணைந்து 24AM ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

இப்படத்தை ‘இன்று நேற்று நாளை' திரைப்படப் புகழ் ரவிகுமார் இயக்குகிறார். மேலும் இப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் டைட்டில் லுக் இம்மாதம் 3-ஆம் தேதி ஏ.ஆர் ரகுமானால் வெளியிடப்பட்ட நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏகபோகமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிவகார்த்திகேயனுக்கும், அவரது ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சி தரும் விதமாக ‘அயலான்' ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த அதிகாரப்பூர்வமான வெளியீட்டின் மூலம், இப்படம் 5 மொழிகளில் உலகமெங்கும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்பதும் இதில் ரகுல் ப்ரீத் சிங் இணைந்துள்ளார் என்பதும் உறுதியாகியுள்ளது. இன்று காலை, KJR Studios தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயனின் பிறந்த நாளையே சிறப்பாக கொண்டாடும் ரசிகர்களுக்கு, இன்று ஒரே நாளில் இரண்டு புதுப் படங்களின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. தற்போது இந்த இரண்டு போஸ்டர்களுமே செம வைரலாகிவருகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com