முகப்புகோலிவுட்

சித்தார்த்-ஷர்வானந்த் படத்தில் இணையும் சிவகார்த்திகேயன் பட நாயகி.?

  | September 19, 2020 23:02 IST
Maha Samudram

ஷர்வானந்த் மற்றும் சித்தார்த் நடிக்க, அஜய் பூபதி இயக்கவுள்ள திரைப்படம் ‘மகா சமுத்திரம்’.

கோலிவுட் ‘பிரின்ஸ்' சிவகார்த்திகேயன் அடுத்ததாக ‘கோலமாவு கோகிலா' படப்புகழ் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தனது புதிய திரைப்படமான ‘டாக்டர்' வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறார். இப்படத்தின் மூலம், நடிகை பிரியங்கா அருள் மோகன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

பிரியங்கா அருள் மோகன் முன்னதாக நானி நடித்த ‘கேங் லீடர்' திரைப்படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமானார். ‘ஒந்த் கதே ஹெல்லா' எனும் திரைப்படத்தில் நடுத்து கன்னட சினிமாவிலும் அறிமுகமாகியுள்ளார். அதன் பிறகு ஆங்கிலம் மற்றும் தமிழில் தயாராகும் ‘மாயன்' படத்தில் ஒப்பந்தமானார்.

3jo6q8eo

ஆனால் இப்போது ‘டாக்டர்' திரைப்படம் முதலில் வெளியாகவுள்ளது என்பதால், சிவகார்த்திகேயனுடனான இப்படமே தமிழில் அவருக்கு அறிமுகத்தை கொடுக்கவுள்ளது. 

இப்போது அவர் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இருமொழிகளில் தயாரகவுள்ள ‘மகா சமுத்திரம்' படத்தில் நடிக்க பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

0cc5d79g

ஷர்வானந்த் மற்றும் சித்தார்த் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க, அஜய் பூபதி இயக்கவுள்ள திரைப்படம் ‘மகா சமுத்திரம்'. இந்த படத்தில் தான் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஊகங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com