முகப்புகோலிவுட்

இராணுவ வீரர் பழனியின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் அறிவித்த பிரபல தயாரிப்பாளர்.!

  | June 17, 2020 16:34 IST
Kjr Studios

KJR Studios தற்போது சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் டாக்டர் திரைப்படங்களைத் தயாரித்துவருகிறது

லடாக் எல்லையில் இந்தியா - சீனா  ராணுவத்தினர் இடையே நடந்த மோதலில், இந்திய தரப்பில், ராணுவ கர்னல் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். அவர்களில் இராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த ‘ஹவில்தார்' பழனியும் வீர மரணம் அடைந்தார். இதற்கு தமிழக முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பல தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஹவில்தார் பழனிக்கு மனைவி வானதி தேவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தமிழக அரசு வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம் நிவாரணம் அறிவித்தது.

இந்நிலையில், பிரபல தமிழ் தயாரிப்பாளர் கொட்டப்பாடி. ஆர். ராஜேஷ் பழனியின் தியாகத்திற்கு வணக்கம் தெரிவித்து, அவரது குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நன்கொடை அளிப்பதாக உறுதியளித்துள்ளார்.

‘லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாராவின் ‘அறம்' திரைப்படத்தினை தயாரித்ததன் மூலம் பிரபலமான தயாரிப்பாளர் கொட்டப்பாடி. ஆர். ராஜேஷ், அஜித்தின் விஸ்வாசம், குலேபகாவலி, ஐரா, விஜய் சேதுபதியின் க/பெ. ரணசிங்கம், சீவகார்த்திகேயனின் ஹீரோ, அயலான், டாக்டர் என பல படங்களை தயாரித்துள்ளார்.

இவர் சமீபத்தில், தனது மருத்துவமனை கட்டணத்தை செலுத்த முடியாமல் பல நாட்களாக அவதிப்பட்டு வந்த விஜயின் ‘தமிழன்' திரைப்பட இயக்குநர் மஜித்தின் மருத்துவ செலவு முழுவதையும் ஏற்று உதவி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com