சிவகார்திகேயன் நடிப்பில் வெளியாகவிருக்கும் ஹீரோ திரைப்படத்திலிருந்து முதல் சிங்கிள் ட்ராக் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியானது.
இரும்புத்திரை பட இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்திகேயன் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் ‘ஹீரோ'. இந்த ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் சிவகார்திகேயனுக்கு ஜோடியாக கல்யானி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும், ஆக்ஷன் கிங் அர்ஜுன், அபாய் தியோல், இவானா, விவேக் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் மற்றும் தொகுப்பாளர் ரூபன் ஆவர்.
KJR ஸ்டூடியோஸ் தயரித்துள்ள ‘ஹீரோ' பட டீசர் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆன நிலையில், தற்போது இப்படத்தின் முதல் பாடல் ‘மால்டோ கித்தாபுலெ' லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. இப்பாடல் வரிகளை சென்னை வட்டார மொழியில் ரசிகர்களை கவரும் விதமாக ரோகேஷ் எழுதியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் ஷ்யாம் விஸ்வநாதன் பாடியுள்ளார். இப்பாடல் தற்போது இணையதளத்தில் வைரலாகியுள்ளது.