முகப்புகோலிவுட்

வெளியானது சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ஹீரோ’ டிரெய்லர்!

  | October 24, 2019 18:15 IST
Sivakarthikeyan

துனுக்குகள்

  • பி.எஸ் மித்ரன் இப்படத்தை இயக்கி இருக்கிறார்
  • யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார்
  • பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடிக்கிறார் அர்ஜுன்
கடந்த ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான “இரும்புதிரை” படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடித்திருந்தார்.
 
இப்படத்தின் வெற்றியை த் தொடர்ந்து இப்படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் ‘ஹீரோ'. இப்படத்தின் நாயகனாக சிவகார்த்திகேயன் நடித்துவருகிறார். இந்த படத்திலும் நடிகர் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், இவானா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
விறுவிறுப்பாக நகரும் இந்த டிரெய்லரில் ‘நம்ம கல்வி முறையில் எல்லாராலையும் படிக்க முடியும், எல்லாராலையும் சாதிக்க முடியாது'  என்கிற வசனம் இடம்பெற்றிருக்கிறது. இவை மட்டும் இல்லாமல் இந்த படத்தின் நாயகன் சிவகார்த்திகேயனின் என்ட்ரிக்காக இன்னொரு ஹீரோ வசனமும் இடம் பெறுகிறது. பின்னணி இசையில் படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. கே.ஜே.ஆர். ஸ்டியோஸ் தயாரிப்பில் அடுத்த ஆட்டத்திற்கு தயாராகி இருக்கிறது ஹீரோ…
 


    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்