முகப்புகோலிவுட்

மிஸ்டர் லோக்கல் படத்தின் தொலைக்காட்சி உரிமையை பெற்ற பிரபல டிவி நிறுவனம்...?

  | May 15, 2019 18:42 IST
Mr Local

துனுக்குகள்

  • ராஜேஷ் இப்படத்தை இயக்கி இருக்கிறார்
  • நயன்தாரா இப்படத்தில் நடித்திருக்கிறார்
  • வரும் 17ம் நாள் இப்படம் வெளியாக இருக்கிறது
இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில்
உருவாகி இருக்கும் படம் 'மிஸ்டர் லோக்கல்'. இந்த படம் வரும் 17ம் நாள் நாடு முழுவதும் திரைக்கு வரவிருக்கிறது.
 
இந்த படத்தில் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். படத்தின் டீசர், ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி பெற்றுள்ளது. இதை படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.
 
மே 17-ம் தேதி படம் ரிலீசாக உள்ள நிலையில் இயக்குநர் ராஜேஷ் படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், மிஸ்டர் லோக்கல் படத்தை டெலிவரி செய்துவிட்டேன். பணிகள் முடிந்துவிட்டன. என்னால் முடிந்தவரை சிறந்த பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த படமாக இந்த கோடைவிடுமுறைக்கு படம் வெளியாகிறது” என்று தெரிவித்துள்ளார்.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்