முகப்புகோலிவுட்

சிவகாத்திகேயன் நடிப்பில் உருவாகும் மிஸ்டர் லோக்கல் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு…?

  | April 19, 2019 13:28 IST
Sivakarthikeyan

துனுக்குகள்

  • இந்த படத்தை இயக்குநர் ராஜேஷ் இயக்கி இருக்கிறார்
  • இந்த படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்
  • ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருக்கிறது
 இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நயன்தாராவுடன் சேர்ந்து நடித்திருக்கும் படம் மிஸ்டர் லோக்கல்.  ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும். இவர்களுடன் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா  இசையமைத்துள்ளார். படத்தின் டீசர், பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
 
முன்னதாக படம் மே 1-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படம் மே 17-ம் தேதி ரிலீசாகும் என்று இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமாக ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம்  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
 
இந்தப் படத்தை அடுத்து ரவிகுமார் இயக்கத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் இரும்புத்திரை பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்