முகப்புகோலிவுட்

வெளியானது சிவகார்த்திகேயனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

  | August 12, 2019 16:27 IST
Nvp

துனுக்குகள்

  • சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் 16வது திரைப்படம் இது
  • சூரி, யோகி பாபு முதல் முறையாக இப்படத்தில் நடிக்கிறார்கள்
  • இயக்குநர் பாரதிராஜா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் 16வது திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சமுத்திரகனி, சூரி, யோகிபாபு, நட்டி நட்ராஜ், இன்னும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். டி.இமான் இசை அமைக்கும் இப்படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு செய்கிறார்.
 
நடிகர் பட்டாளமே களம் இறங்கி இருக்கும் படத்தின் தலைப்பு அறிவிக்கப்படாமலே இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. ‘நம்ம வீட்டு பிள்ளை' என தலைப்பிட்டுள்ள பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிவகார்த்திகேயன் வேட்டி, சட்டையுடன் கையில் இரும்பு கம்பியுடன் முறைக்கும் போட்டோ இடம் பெற்றிருக்கிறது. தற்போது இப்படத்தின் போஸ்டரை சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் சமுகவலையதளங்களில் பகிர்ந்து வைரலாக்கி வருகிறார்கள்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்