முகப்புகோலிவுட்

மிஸ்டர். லோக்கலுக்குப் பின் எல்ஐசியாக உருவெடுக்கும் சிவகார்த்திகேயன்

  | April 22, 2019 21:09 IST
Sivakarthikeyan

துனுக்குகள்

 • சிவகார்த்திகேயன் நடித்து மிஸ்டர் லோக்கல் வெளிவரவுள்ளது
 • படத்திற்கு எல்ஐசி பெயரிடவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
 • இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

சிவகார்த்திகேயன் நடித்து இயக்குநர் எம். ராஜேஸ் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல் வெளிவரவுள்ளது. சில பணப் பிரச்னைகள் காரணமாக மிஸ்டர்.லோக்கல் பட வெளியீடு தாமதமாகியுள்ளது.

இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கதாநாயகி கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோருடன் இணைந்துசிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். 

இந்தப் படத்திற்கு எல்ஐசி (Life is colorful) என்று பெயரிடப்படவுள்ளதாக படத் தயாரிப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. 

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். படத்தில் இனி யார் யார் இடம் பெறுவார்கள் என்பதை  விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com