முகப்புகோலிவுட்

தளபதி 64 தலைப்பு இப்போ சிவகார்த்திகேயனின் புதுப்படத்துக்கு வச்சாச்சு..!

  | December 03, 2019 11:28 IST
Thalapathy 64

துனுக்குகள்

  • சிவகார்த்திகேயனின் ஹீரோ திரைப்படம் இம்மாதம் 20-ஆம் தேதி வெளியாகிறது.
  • ஹீரோ திரைப்படத்தை பி.எஸ் மித்ரன் இயக்கியுள்ளார்..
  • சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை நெல்சன் இயக்குகிறார்.
விஜயின் தளபதி 64 திரைப்படத்துக்கான டைட்டில் என பேசப்பட்டுவந்த தலைப்பு, தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்துக்கு டைட்டிலானது.

சிவகார்த்திகேயன் தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ‘ஹீரோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரித்து வரும் இத்திரைப்படம் வரும் டிசம்பர் 20-ஆம்தேதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மேலும், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் மற்றும் அபே தியோல் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இத்திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்திலிருந்து ‘சக மனிதனை மதிக்கும்' என்ற டைட்டில் பாடல் மற்றும் ‘மால்ட்டோ கித்தாபுல' எனும் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வர்வேற்ப்பைப் பெற்ரது. மேலும் இப்படத்தின் டீஸர் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அடுத்த படம் குறித்த தகவலை அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.கே. ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ‘ஹீரோ' பட தயாரிப்பு நிறுவனம் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் வழங்கும் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு தான் அது. அப்படத்திற்கு ‘டாக்டர்' என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். மேலும், அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 64' என்று அழைக்கப்படும் திரைப்படத்துக்கு டாக்டர் என தலைப்பிடவுள்ளதாக பேசப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்