முகப்புகோலிவுட்

"என் படத்திற்கு முதல்முறையாக இவ்வளவு குடும்பங்கள் வந்துள்ளது" எஸ்.ஜே.சூர்யா நெகிழ்ச்சி

  | May 20, 2019 19:34 IST
Monster

துனுக்குகள்

  • நெல்சன் இப்படத்தை இயக்கி இருக்கிறார்
  • பிரியா பவானி சங்கர் இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ளார்
  • எஸ்.ஜே. சூர்யா இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார்
நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யாவின் படத்தை முதல் முறையாக குடும்பமாக பார்க்கிறார்கள் என்றால் அது இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான "மான்ஸ்டர்".
 
இயக்குநர் செல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் இவர்களுடன் கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இப்படம்.  இப்படத்தின் வெற்றியைடைந்ததை அடுத்து படக்குழுவினர் பத்ரிகையாளர்களை சந்தித்தனர்.
 
அப்போது பேசிய எஸ்.ஜே.சூர்யா,
"என்னுடைய கனவுகளும் ஆசைகளும் அதிகம் ஒரு நடிகனாக சாதிக்க வேண்டும் என எண்னி 25 வருடங்கள் ஓடிவிட்டன. பாலைவனத்தில் ஒட்டகம் போல , முதல்முறையாக குடும்பங்களை இணைத்துள்ளது மான்ஸ்டர். என் படத்திற்கு முதல்முறையாக இவ்வளவு குடும்பங்கள் வந்துள்ளது இதை தவறவிட்டு விட்டேன் இவ்வளவு நாள். ஒரு குத்து பாடல் இல்லை கிளாமர் இல்லை ஆனால் கூட்டம் வருகிறது. இதற்கு மேல் தொடர்ந்து நடிகனாக உழைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என நினைக்கிறேன். நல்ல கதை வரவில்லை என்றால் என்னிடம் கதை உள்ளது அதை எடுப்பேன்"
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்