முகப்புகோலிவுட்

சிம்புவின் ‘மாநாடு’ல் இணைந்த எஸ்.ஜே சூர்யா..! முக்கிய நடிகர்கள் அறிவிப்பு..!

  | February 04, 2020 15:44 IST
Maanaadu

மேலும் நடிகர் ஒய்.ஜீ மகேந்திரன், மனோஜ் குமார் பாரதிராஜா மற்றும் டேனியல் போப் இப்படத்தில் இணைந்துள்ளனர்.

எஸ்.டி.ஆர் கதாநாயகனாக நடிக்கும் மாநாடு திரைப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா உட்பட பல முக்கிய நடிகர்கள் இணைந்துள்ளனர்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘மாநாடு'. இப்படத்தில் எஸ்.டி.ஆர் 'அப்துல் காலிக்' எனும் பெயரில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இதில் ஹீரோ திரைப்படத்தில் நடித்த கல்யாணி பிரியதர்ஷன் சிம்புவுக்கு ஜோடியாக் நடிக்கிறார். மேலும், இப்படத்தில் இயக்குநர் பாரதிராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர், பிரேம்ஜி அமரன், கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தை வி ஹவுஸ் பேனரில் சுரேஷ் காமாட்சி மற்றும் தீபன் பூபதி இணைந்து தயாரிக்கின்றனர். ரச்சர்டு எம். நாதன் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கே.எல். படத்தொகுப்பு செய்கிறார். மேலும், யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், சிம்புவின் பிறந்தநாளான நேற்று அவரின் கதாப்பாத்திரத்தின் பெயரை இப்படத்தின் இயக்குனர் வெளியிட்டார். முதல் முறையாக இஸ்லாமியராக நடிக்கும் சிம்புவின் பெயர் இப்படத்தின் ‘அப்துல் காலிக்' ஆகும்.

இந்த அறிவிப்பை ரசிகர்கள் கொண்டாடிவரும் நிலையில், இன்று இப்படத்தில் இணைந்துள்ள மேலும் சில நடிகர்களை இப்படத்தின் தயாரிப்பாளர் தனது ட்விட்டரில் வெளியட்டார். இயக்குனராகவும், நடிகராகவும் சிறப்பான திறமையை வெளிப்படுத்தும் எஸ்.ஜே. சூர்யா இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் நடிகர் ஒய்.ஜீ மகேந்திரன், மனோஜ் குமார் பாரதிராஜா மற்றும் டேனியல் போப் இப்படத்தில் இணைந்துள்ளனர். இப்படம் ஆகஸ்ட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com