முகப்புகோலிவுட்

நாயகனை துரத்தும் எலி…! தப்பிப்பாரா எஸ்.ஜே. சூர்யா..?

  | May 02, 2019 20:08 IST
Monster

துனுக்குகள்

  • இப்படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கி இருக்கிறார்
  • இப்படத்தில் ப்ரியா பவாணி சங்கர் கதாநாயகியாக நடித்திருக்கிறார்
  • கருணாகரன் இப்படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்திருக்கிறார்
‘ஒரு நாள் கூத்து' படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் எஸ்.ஜே.சூர்யாவை நடிபில் ‘மான்ஸ்டர்' என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார்.
 
இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யாவிற்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் நாயகியாக நடிக்க இவர்களுடன் கருணாகரன் நகைச்சுவை வேடத்தில் நடித்திருக்கிறார்.
 
பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படம் வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் டீசர் நாளை வெளியாக இருக்கிறது.ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த படத்தில் எலி ஒன்றையும் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர், முடிந்த வரை நிஜமான எலியை பயன்படுத்தியிருக்கிறாராம் மீதியை கிராபிக்ஸ் கொண்டு எடுத்திருக்கிறாராம். இந்த படதின் டீசர் இன்று மாலை வெளியாகி சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது.
 

இந்த டீசரை பார்க்கும் போது எலி ஒன்றால் எஸ்.ஜே. சூர்யா படாத பாடு படுகிறார் என்பது மட்டும் தெரிகிறது. எலிக்கு பயந்துக்கொண்டு வீட்டை பூட்டிவிட்டு மொட்டை மாடிக்கு சென்று விடுகிறார். எலியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டேன் என்று கருணாகரனிடம் சொல்கிறார். அவரோ அதை வியப்பாக கேட்கிறார். திரைப்படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் எலியா என்று வாயை பிளக்கும் போது இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் வில்லன் எலி என்பது மட்டும் உறுதியாகிறது. கோடை விடுமுறையில் குழந்தைகளை உற்சாகப்படுத்தும் விதத்தில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த டீசரில் இடம் பெற்றிருக்கும் காட்சிகள் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச்செய்துள்ளது. விரைவில் எலியின் ஆட்டத்தைக்கான ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்