முகப்புகோலிவுட்

சிவகார்த்திகேயனுடன் இணையும் மீரா மிதூன்! SK16 புதிய அப்டேட்!

  | August 12, 2019 20:18 IST
Sk 16

துனுக்குகள்

 • பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேரிய பிறகு இவர் நடிக்கும் முதல் படம்
 • மிஸ் சௌத் இந்தியா பட்டம் பெற்றவர் மீரா மிதூன்
 • முதல் முறையாக சிவகார்த்திகேயனுடன் இப்படத்தில் நடிக்கிறார் இவர்
சிவகாத்திகேயன் நடிக்கும் 16வது படமான ‘நம்ம வீட்டு பிள்ளை' படத்தில் இணையும் மீரா மிதூன்.
 
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ‘நம்ம வீட்டு பிள்ளை'. சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தில் பாரதிராஜா, சமுத்திரகனி, யோகி பாபு, சூரி, ஐஷ்வர்யா ராஜேஷ், இன்னும் பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
 
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் கூடுதல் தகவலாக மாடல் அழகியும் ‘8 தோட்டாக்கள்', ‘ தானா சேர்ந்த கூட்டம்' உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை மீரா மிதூன் இப்படத்தில் இணைந்துள்ளார் என்கிற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
 
இவர் சமீபத்தில்தான் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்கச்சியில் இருந்து வெளியேரினார். இன்னும் மீரா மிதூன் சர்ச்சை விவாதங்கள் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்திருக்கிறார் மீரா மிதூன்.
 
 
 
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com