முகப்புகோலிவுட்

"படப்பிடிப்புகளை தவிர்ப்பதே உசிதம்.. ஆனால்..!!" - நடிகை கஸ்தூரி சொல்லும் அட்வைஸ்

  | May 31, 2020 07:38 IST
Fefsi

துனுக்குகள்

 • கொரோனா வைரஸின் விளைவாக நாடுமுழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு
 • தமிழகத்தில் கொரோனாவின் வீரியம் எப்பொழுது குறையும் என்று
 • அதனால் எச்சரிக்கை எச்சரிக்கை கவனம் கவனம். மிகுந்த எச்சரிக்கை
கொரோனா வைரஸின் விளைவாக நாடுமுழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து வணிக மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளும் தடைப்பட்டு நின்றன. இந்நிலையில் பல மாவட்டங்களில் தடைகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், திரைப்படத் துறையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கடந்த வாரம் முதல் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அண்மையில், சில நிபந்தனைகளுடன் சீரியல் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. 

ஆனால் தற்போது 20 பேரை கொண்டு படப்பிடிப்பு மற்றும் பிற பணிகளை நடத்த கடினமாக உள்ளது என்றும், அதை உயர்த்தி 60 வரை பயன்படுத்தி படப்பிடிப்பு மற்றும் பிற வேலைகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. தற்போது இதனை ஏற்று  60 பேர் வரை பயன்படுத்தி பணிகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

அரசின் இந்த முடிவுக்கு நன்றிகளும் பாராட்டுகளும் குவிந்து வரும் நிலையில் நடிகை கஸ்தூரி தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். அவருடைய முகநூல் பதிவில் "தமிழகத்தில் கொரோனாவின் வீரியம் எப்பொழுது குறையும் என்று யாருக்கும் தெரியாது. இன்னும் ஒன்றிரண்டு மாதம் படப்பிடிப்புகளை தவிர்ப்பதே உசிதம், ஆனால் எல்லோருக்கும் அதற்கு பொருளாதாரம் இடம் கொடுக்காது. வயிற்றுப்பாட்டை பார்க்கவேண்டுமே ! அதனால் எச்சரிக்கை எச்சரிக்கை கவனம் கவனம். மிகுந்த எச்சரிக்கை தொலைநோக்கு பார்வை, பொறுமை அவசியம்", என்று குறிப்பிட்டுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com