முகப்புகோலிவுட்

'அனைவருக்கும் நன்றி, ஆனா..!!' - முன்கூட்டியே வாழ்த்திய ரசிகர்கள், விளக்கம் கொடுத்த ஹன்சிகா..!!

  | July 09, 2020 10:47 IST
Hansika

துனுக்குகள்

  • தன்னுடைய சிறுவயதில் விளம்பர நிகழ்ச்சிகள், சின்னத்திரை நாடகங்கள்
  • கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த ஹன்சிகா
  • இன்றே தனக்கு வாழ்த்து சொன்ன நிலையில், வாழ்த்திய அனைவர்க்கும் நன்றி ஆனால்
தன்னுடைய சிறுவயதில் விளம்பர நிகழ்ச்சிகள், சின்னத்திரை நாடகங்கள் என்று தொடங்கி படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக தோன்றி அதன் பின்னர் முன்னணி நடிகையாக மாறியவர் தான் பிரபால நடிகை ஹன்சிகா மோட்வானி. 'ஹவா' என்ற ஹிந்தி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 2007ம் ஆண்டு வெளியான அல்லு அர்ஜுனின் 'Desamuduru' படத்தின் மூலம் கதாநாயகியாக உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு Film Fare வழங்கும் சிறந்த அறிமுக நடிகைக்கான விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 

கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த ஹன்சிகா 2011ம் ஆண்டு வெளியான தனுஷின் 'மாப்பிள்ளை' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அறிமுகமான குறுகிய நாட்களில் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ஹன்சிகா. பிரபு தேவா, விஜய், சிம்பு, ஜெயம் ரவி போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார். தற்போது தமிழில் இவர் நடித்து வரும் படம் “மஹா”. 

இந்த லாக் டவுன் காலத்தில் தனக்கென தனி youtube சேனல் தொடங்கி அதில் காணொளிகளை வெளியிட்டு வரும் ஹன்சிகா அடுத்த மாதம் 9ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். ஆனால் ரசிகர்கள் பலர் இன்றே தனக்கு வாழ்த்து சொன்ன நிலையில், வாழ்த்திய அனைவர்க்கும் நன்றி ஆனால் என்னுடைய பிறந்தநாள் ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com