முகப்புகோலிவுட்

'வக்கீலை வைத்து மிரட்டுகிறார்' - லட்சுமி ராமகிருஷ்ணன் மீது வனிதா புகார்..?

  | July 30, 2020 16:22 IST
Vanitha Vijayakumar

துனுக்குகள்

 • சில தினங்களுக்கு முன்பு பிரபல நடிகை வனிதா ஒரு இணைய வழி
 • லட்சுமி ராமகிருஷ்ணன் தனது வக்கீலை வைத்து தன்னை மிரட்டுவதாகவும்
 • வக்கீலை கொண்டு லட்சுமிக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளார்
சில தினங்களுக்கு முன்பு பிரபல நடிகை வனிதா ஒரு இணைய வழி நேர்காணலில் தகாத வார்த்தைகளில் நடிகையும் சமூக ஆர்வலருமான திருமதி. லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களை தகாத வார்த்தைகளில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் பல குழப்பங்கள் நிலவி வரும் நிலையில் இந்த நிகழ்வு குறித்து தற்போது சில தினங்களுக்கு முன்பு ஒரு அறிக்கை வெளியிட்டார் லட்சுமி அவர்கள். 

அந்த பதிவில் "நியான் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான யூடியூப் சேனல் ஏற்பாடு செய்திருந்த ஸ்கைப் நேர்காணலின்போது வனிதா விஜயகுமார் என்னையும் எனது கணவரையும் அனாகரிகமான வார்த்தைகளால் தாக்கி பேசி இருந்தார். என்னுடன் பேச வேண்டும் என்று வனிதா விஜயகுமார் தான் அந்த சேனலை தொடர்புகொண்டு ஏற்பாடு செய்யும்படி கேட்டு இருக்கிறார். ஆனால் நேர்காணலில் வேண்டுமென்றே தவறாக பேசினார் பின் அது ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்தது அதை தொடர்ந்து நானும் எனது கணவரும் எங்களது வழக்கறிஞர் மூலமாக வனிதா விஜயகுமார்க்கு, குற்றவியல் மற்றும் உரிமையியல் சட்டத்தின் கீழ் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். என்று தெரிவித்தார். 

இந்நிலையில் நேற்று இது குறித்து பேசியுள்ள வனிதா, "நல்ல மனம் படைத்த இந்த சமூக ஆர்வலர் லட்சுமி ராமகிருஷ்ணன் தனது வக்கீலை வைத்து தன்னை மிரட்டுவதாகவும். அந்த குடும்பத்திற்கு 1.25 கோடி பணம் நஷ்ட ஈடாக நான் தரவேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த விஷயத்தை தற்போது தானும் தனது வக்கீலை கொண்டு லட்சுமிக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளார் வனிதா.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com