முகப்புகோலிவுட்

4-வது முறையாக இணைகிறதா மெர்சல் கூட்டணி.?? சமூக வலைதளங்களில் பரபரப்பு..!

  | August 04, 2020 20:15 IST
Atlee

தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய மூன்று திரைப்படங்களுக்கு இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

‘தளபதி' விஜய் மற்றும் இயக்குநர் அட்லீ ஆகியோர் பிளாக்பஸ்டர் திரைப்படங்களுக்காக பெயர் பெற்றவர்கள். தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய மூன்று திரைப்படங்களுக்கு இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

இப்போது, அவர்கள் இருவரும் மீண்டும் ஒன்றிணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக ஒரு புதிய அறிக்கை வந்துள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இதுவரை செய்யப்படவில்லை என்றாலும், இந்த செய்தி ஏற்கனவே இணையத்தில் ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்களுடன் அனைத்து சமூக ஊடக தளங்களிலும் பகிரப்பட்டுள்ளது.

அவர்களின் கடைசி படம் பிகில் ரூ. 300 கோடி வசுலித்து பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அதில் நயன்தாரா கதாநாயகியாகவும், ஜாக்கி ஷிராஃப் முக்கிய வில்லனாகவும் நடித்துள்ளனர். பெண்கள் மற்றும் கால்பந்து விளையாட்டை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்தார், ஒன்று ராயப்பன் - ஒரு உள்ளூர் டான், மற்றொன்று கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளர் - மைக்கேல் என்கிற ‘பிகில்'. இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார்.

இவர்களது முந்தைய படமான மெர்சலில் விஜய் மூன்று வேடங்களில் நடித்திருந்தார், மேலும் அதில் சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் முன்னணி பெண் கதாப்பாத்திரங்களில்  நடித்திருந்தனர்.

அதேபோல், ‘தெறி'யில் விஜய் ஒரு போலீஸ்காரராக நடித்தார், சமந்தா அவருக்கு ஜோடியாக நடிக்க, எமி ஜாக்சன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். மிரட்டலான வில்லனாக மறைந்த முகழ்பெற்ற இயக்குநர் மகேந்திரன் நடித்திருந்தார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com