முகப்புகோலிவுட்

"1300 உறுப்பினர்கள் பயனடைவார்கள்" - சூர்யா அளித்த நிதி - நன்றி சொன்ன நீதிபதி..!

  | September 21, 2020 11:23 IST
Suriya

துனுக்குகள்

 • செல்வராகவனின் என்.ஜி.கே வெற்றியைத் தொடர்ந்து சூர்யாவுக்கு வெளிவர உள்ள
 • இந்நிலையில் அந்த படத்தின் மூலம் கிடைத்த லாபத்தில் தற்போது 1.5 கோடி
 • திரு K. முரளிதரன் , திரு KJR ராஜேஷ் ஆகியோர் தலைமையில் நீதிபதி
செல்வராகவனின் என்.ஜி.கே வெற்றியைத் தொடர்ந்து சூர்யாவுக்கு வெளிவர உள்ள திரைப்படம் தான் ‘சூரரைப் போற்று'. சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கும் இந்த படத்தை இயக்குகிறார் சுதா கொங்கரா. ‘சூரரைப் போற்று' படத்தில் தெலுங்கு நடிகர் மோகன் பாபு மற்றும் பிரபல தமிழ் நடிகர் கருணாஸ் ஆகியோர் நடித்திருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படத்தைத் தயாரித்து வழங்குகின்றது சூர்யாவின் 2டி நிறுவனம். இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி வேலைகள் நடந்து முடிந்து தற்போது ரிலீஸ் தேதிக்காக காத்திருக்கிறது. இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 9-ம் தேதி இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து படத்தின் வெளியீடு தள்ளிக்கொண்டே போக தற்போது பெருந்தொகைக்கு இணையத்தில் வெளியாக ஒப்பந்தமாகி உள்ளது சூரரைப் போற்று. ஒரு தயாரிப்பாளராக சூர்யா எடுத்த முடிவு சரி என்பது பலரின் கருத்து. இந்நிலையில் அந்த படத்தின் மூலம் கிடைத்த லாபத்தில் தற்போது 1.5 கோடி ரூபாயை திரைப்பட குழுவிற்கு அண்மையில் அளித்துள்ளார் சூர்யா. "கலைப்புலி S தாணு அவர்களின் தலைமையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு ஆயுள்காப்பீடு செய்ய வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டது . மனுவை விசாரித்த நீதிமன்றம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு காப்பீட்டு பிரீமியம் செலுத்த ஏற்பாடுகள் செய்துதருமாறு உத்தரவிட்டது . இந்நிலையில் OTT மூலமாக சூரரை போற்று திரைப்படம் வெளியாகும் நிலையில் சூர்யா தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு 30 லட்சம் நன்கொடையாக வழங்கினார். "அந்த தொகையை தற்போது திரு கே ஆர் , திரு K. முரளிதரன் , திரு KJR ராஜேஷ் ஆகியோர் தலைமையில் நீதிபதி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அறக்கட்டளையில் போதுமான நிதி இல்லாத இந்த சமயத்தில் சூர்யா தந்த இந்த பெருந்தொகையின் மூலம் 1300 உறுப்பினர்கள் காப்பீட்டு பிரீமியம்  மூலம் பயனடைவார்கள் . சூர்யா அவர்களுக்கு நன்றி என நீதிபதி தெரிவித்துள்ளார்." என்று பிரபல சினிமா PRO அய்யா டைமண்ட் பாபு அவர்கள் தெரிவித்துள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com