முகப்புகோலிவுட்

சூர்யாவின் ‘சூரரை போற்று’ படத்தின் சூப்பர் அப்டேட்!

  | September 25, 2019 17:30 IST
Soorarai Pottru

துனுக்குகள்

 • தமிழில் சுதா கொங்காரா இயக்கும் மூன்றவது படம் இது
 • இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின் மெண்ட் தயாரித்து வருகிறது
 • ஜி.வி.பிரகாஷ் இசை அமைக இந்த படத்தில் அபர்னா பாலமுரலி நாயகியாக நடிக்கிறார்
தமிழ் சினிமாவில் பெண் இயக்குநர் மிகக்குறைவு. விரல் விட்டு என்னக்கூடிய அளவிற்கே பெண் இயக்கநர்கள் இருக்கிறார். பல்வேறு துறையில் சாதனைப்படைத்து வரும் பெண்கள் சமீப காலமாகவே சினிமா துறையில் இயக்குநராக அவதரித்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் தன் முதல் படத்தின் மூலமே அதிக கவனம் பெற்றவர் சுதா கொங்காரா(Sutha Kongara).
 
கடந்த 2010ம் ஆண்டு வெளியான ‘துரோகி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான சுதா கொங்காரா இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். தன்னுடைய திரைக்கதை எழுதும் அற்றலால் ‘துரோகி' படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்த சுதா கொங்காரா தன் அடுத்த படைப்பிற்கு எடுத்துக்கொண்ட காலம் 6 ஆண்டுகள். கடந்த 2016ம் ஆண்டு இவர் இயக்கத்தில் மாதவன்-ரித்திகா சிங் நடிப்பில் வெளியாக இறுதி சுற்று திரைப்படம் பெரும் அளவில் பேசப்பட்டது. தமிழ் சினிமாவின் தன் முதல் படத்தில் ஓரளவிற்கு அறிந்த சுதா ‘இறுதி சுற்று' திரைப்படத்திற்கு பிறகு ஊடக வெளிச்சத்திற்கு வந்தார். அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இந்த படம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்று விருதுகளையும் கைபற்றியது. இதன் வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தில் ‘குரு' என்கிற தலைப்பில் தெலுங்கில் இயக்கி வெற்றி கண்டார். அதன் பிறகு தற்போது சூர்யா நடிப்பில் ‘சூரரை போற்று' படத்தை இயக்கி வருகிறார்.
 
21vut1u8


கே.வி ஆனந்த் - சூர்யா(Suriya) கூட்டணியில் உருவான 'காப்பான்'(kaappaan) திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் 'சூரரை போற்று' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனையடுத்து இந்தப் படத்தின் பின்னணி பணிகள் துவங்கவுள்ளது. இதனிடையே இந்தப் படம் வருகின்ற பொங்கல் அல்லது தமிழ்ப் புத்தாண்டிற்கு திரைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.
 
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com