முகப்புகோலிவுட்

வாழ்க்கையில் 3 முக்கியமான ஆண்களை நினைவு கூர்ந்த சௌந்தர்யா ரஜினிகாந்த்…..!

  | February 11, 2019 18:22 IST
Rajinikanth

துனுக்குகள்

  • இன்று சென்னையில் இவருக்கு திருமணம் நடைபெற்றது
  • இவரது திருமண நிகழ்ச்சிக்கு முதல்வர் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார்
  • எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் ஏற்கனவே திருமணமாகி முறையாக விவாகரத்து பெற்றவர். தற்போது தொழிலதிபர் விசாகன் என்பரை இன்று இரண்டாவதாக மணமுடித்தார்.

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது வாழ்க்கையில் முக்கியமான மூன்று ஆண்களை அவர் பட்டியலிட்டுள்ளார். அதில், 

''வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன். என்னுடைய அன்பு அப்பா, தேவதை போன்ற மகன், இப்போது என்னுடைய விசாகன் ஆகியோர் என்னுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான மூன்று ஆண்கள்'' என்று தெரிவித்துள்ளார்.
 
 
அமெரிக்காவில் படித்த விசாகன், தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.திருமணத்துக்கு முன்பு கடந்த 3 நாட்களாக திருமண வரவேற்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் இரு குடும்பங்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இன்று நடைபெற்ற திருமணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அமைச்சர்கள்,எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் உட்பட இன்னும் பல ஆளுமைகள், திரையுலகினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்