முகப்புகோலிவுட்

திருமண கோலத்தில் ரஜினி!!! – வெளியான புகைப்படங்கள்..

  | February 27, 2019 18:26 IST
Soundarya Rajinikanth Tweet

துனுக்குகள்

  • ரஜினியின் திருமண நாளுக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினியின் மகள்.
  • ரஜினிக்கு 38வது திருமண நாள் கொண்டாட்டம் இது.
  • லவ் யூ மம்மி, டாடி என்று பதிவிட்டிருந்தார் சௌந்தர்யா.
சூப்பர் ஸ்டாரின் திருமண நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, அவரின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த், தன் சமூக வலைதளத்தில் ரஜினி – லதா ஆகியோரின் திருமண புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.  1981ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் – லதா ஆகியோரின் திருமணம் நடைப்பெற்றது.  தங்களது 38வது பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாடினர் தம்பதியினர். 
                  
தன் அப்பாவின் திருமண புகைப்படத்தை வெளியிட்ட சௌந்தர்யா அதில், நீங்கள் சிறந்த தம்பதி என்றும் லவ் யூ மம்மி, டாடி என்றும் பதிவிட்டு, தன் திருமண வாழ்த்துகளை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.   மேலும் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்திற்கு மாலை அணிவிப்பது போன்று இருந்தது அந்த புகைப்படம்.  இந்த புகைப்படத்தில் தம்பதியினர் காதல் ததும்ப புன்னகைத்துள்ளனர்.  சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட இப்புகைப்படத்தை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.   
சமீபத்தில்தான் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவிற்கும் – தொழிலதிபர் விசாகன் வணங்காமுடிக்கும் திருமணம் சென்னையில் நடைப்பெற்றது.  இத்திருமணத்திற்கு நடிகர் கமல்ஹாசன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போன்ற முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்