முகப்புகோலிவுட்

திருமணத்திற்கு தயாராகும் ரஜினியின் மகள் சௌந்தர்யா, வைரலாகும் புகைப்படம்….!

  | February 05, 2019 12:54 IST
Soundarya Rajinikanth Wedding

துனுக்குகள்

 • சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் சௌந்தர்யா
 • இவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர்
 • இன்னும் இரண்டு வாரத்தில் இவருக்கு திருமணம்
ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். முதல் திருமணத்திற்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் முறையாக விவாகரத்து பெற்றனர்.
 
இந்த நிலையில் தொழில் அதிபர் விசாகனுக்கும் சௌந்தர்யாவுக்கும் அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. விசாகன் தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் ஆவார், விசாகனும் விவாகரத்து பெற்றவர். விசாகன் மருந்து தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். வஞ்சகர் உலகம் எனும் படத்திலும் நடித்துள்ளார்.
 
அடுத்த மாதம் 10,11 தேதிகளில் சென்னையில் உள்ள பெரிய மண்டபத்தில் சௌந்தர்யா - விசாகன் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்பட்டது.  இந்நிலையில் சௌந்தர்யா ரஜிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கல்யாண தோற்றத்தில் இருப்பது போல் தனது போட்டோ ஒன்றை பதிவிட்டிருகிறார். அதில் இன்னும் இரண்டு வாரத்தில் விசாகன், சௌந்தர்யா திருமணம் என்று பதிவிட்டிருக்கிறார்.
 
மேலும் இந்த திருமணத்தில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்கவுள்ளனர். திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் தேனாம்பேட்டை E3 காவல் நிலையத்திற்கு சென்று ஒரு மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் வரும் 10 தேதி அன்று எங்களது மகள் சௌந்தர்யா திருமணம் போயஸ் கார்டன் வீட்டில் நடைபெற உள்ளதால் இந்த கல்யாண விழாவில் விவிஐபிகளான சினிமா நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் பங்கேற்க உள்ளனர். ஆகையால் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு குறிப்பிட்டுள்ளார்.
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com