முகப்புகோலிவுட்

பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தென்னிந்திய டாப் நட்சத்திரங்கள்..!

  | September 17, 2020 18:51 IST
Pm Modi

மோடியுடனான ஒரு புகைப்படத்தை மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மோகன் லால் ட்விட்டரில் பகிர்ந்துகொண்ட்டார்.

பிரதமர் நரேந்திர மோடியின் 70-வது பிறந்தநாளில், சமூக ஊடகங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்களால் நிரம்பி வழிகின்றன. அதேபோல், தென்னிந்திய பிரபலங்களும் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் “மரியாதைக்குரிய அன்புள்ள நரேந்திர மோடி ஜி, இந்த கடினமான காலங்களில் உங்களில் உள்ள கடினமான மனிதருக்கு அதிக வலிமையை பெற வாழ்த்துகிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்றார்.

உலக நாயகன் கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் “இந்த உக்கட்டான நேரங்களில் நாட்டை முன்னெடுத்து செல்ல சிறந்த சக்தி, மகிழ்ச்சி மற்றும் பலத்தையும் பெற நமது இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

மோடியுடனான ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்ட மலையாள ‘சூப்பர் ஸ்டார்' மோகன் லால் தனது ட்விட்டர் பதிவில் “எங்கள் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்னும் பல மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வருடங்களை நீங்கள் பெற விரும்புகிறேன்” என்றார்.

அதேபோல், டோலிவுட் ‘மெகாஸ்டார்' சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் “எங்கள் அன்பான பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிக்கு 70-வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்! பல ஆண்டுகளுக்கு நமது எங்கள் பெரிய தேசத்திற்கு சேவை செய்ய படை உங்களுடன் இருக்கட்டும்!” என்று எழுதியுள்ளார்.

அதேபோல், ‘பவர் ஸ்டார்' பவன் கல்யாண், மகேஷ் பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com