முகப்புகோலிவுட்

தர்பாரில் ரஜினிக்கு குரல் கொடுக்கும் பிரபல பின்னணி பாடகர்..?

  | May 17, 2019 19:53 IST
Rajinikanth

துனுக்குகள்

  • இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்
  • இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்
  • லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட படத்தைத் தொடர்ந்து ரஜினி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்' படத்தில் நடித்து வருகிறார். 
 
இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.
நயன்தாரா இதற்கு முன்பாக சந்திரமுகி, குசேலன் ஆகிய படங்களில் ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தார். இதத் தொடர்ந்து 3வது முறையாக இப்படத்தில் இணைந்திருக்கிறார்.
 
இந்த படத்தில் ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார். வில்லனாக இந்தி நடிகர் பிரதிக் பாபர் நடிப்பதாக கூறப்படுகிறது.
 
நீண்ட நாட்களுக்கு பிறகு காவல்துறை அதிகாரியாக ரஜினி நடிக்கிறார். இந்நிலையில்  இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இம்மாத இறுதியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என்று தெரிகிறது.
 
அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கும் இந்த படம் 2020 பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் தர்பார் படத்தின் ரஜினி அறிமுக பாடலை அவரது ஆஸ்தான பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாட இருப்பதாக தகவல் வருகின்றன. பேட்ட படத்திலும் ரஜினி அறிமுக பாடலான மரண மாஸ் பாடலை அவர்தான் பாடினார்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்