முகப்புகோலிவுட்

யாரு ஹாட் நானா? சமந்தாவா? கவர்ச்சி படத்தை வெளியிட்ட ஸ்ரீரெட்டி!

  | September 14, 2019 18:01 IST
Sri Reddy

தெலுங்கு திரையுலகிலும் உள்ளதாக ஸ்ரீரெட்டி பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

துனுக்குகள்

 • தெலுங்கு திரையுலகில் 'me too' விவகாரம் தொடர்பாக பரபரப்பை ஏற்படுத்தியவர்
 • கவர்ச்சி போட்டோ ஒன்றை பதிவிட்டு சமந்தாவை வம்புக்கு இழுத்துள்ளார்
 • தொடர்ந்து 'Me Too' இயக்கத்தை முன்னெடுத்து செல்கிறார் இவர்
தெலுங்கு திரையுலகில் ‘Me Too' இயக்கத்தின் மூலம் முக்கிய பிரமுகர்கள் மீது பாலியல் புகார்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி(Sri reddy) . படவாய்ப்பு தருவதாக நடிகைகளை பாலியலுக்கு அழைக்கும் பழக்கம் தெலுங்கு திரையுலகிலும் உள்ளதாக ஸ்ரீரெட்டி பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.  அங்குள்ள முக்கிய பிரமுகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதற்கான ஆதாரங்களை SRI REDDY, SRI LEAKS என்கிற வலைபக்கத்தில் வெளியிட்டு வந்தார்.
 


சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுப்பது முதல் நடிகர் சங்கத்தில் சேர்த்துகொள்வது வரை இவர் குற்றச்சாட்டு நீண்டது. இவற்றையெல்லாம் கண்டிக்கும் வகையில் ஹைதராபாத்தில் உள்ள திரைப்பட வர்த்தக சபையின் முன் அரை நிர்வாண போராட்டம் நடித்தி பரபரப்பை ஏற்படுத்தினார். அதன் பின் சென்னைக்கு குடியேறிய இவர் தமிழ் திரையிலகில் உள்ள பிரபலங்கள் மீதும் தனது குற்றச்சாட்டை முன்வைத்தார். இவரால் தமிழ் திரையுலகும் சற்று ஆட்டம் காணத்தொடங்கியது. இந்நிலையில் அவ்வப்போது தனது முகநூல் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு சில கருத்துகளை பதிவிடுவது வழக்கமாக கொண்டிருந்தார். தற்போது தனது முகநூல் பக்கத்தில் சமந்தாவின்(samantha) போட்டோ ஒன்றையும் தன்னுடைய கவர்ச்சி போட்டோ ஒன்றையும் பதிவிட்டு சமந்தா பிரபலமான நடிகைதான் ஆனால் எங்களில் யார் கவர்ச்சியாக இருக்கிறோம் என்று தன்னுடைய கவர்சியான புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டு சமந்தாவை வம்புக்கு இழுத்துள்ளார். இதற்கு முன்பு கீர்த்தி சுரேஷ் குறித்தும் சர்சையான கருத்தை அவர் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com