முகப்புகோலிவுட்

ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல; டிஜிபி கருத்தால் பரபரப்பு!

  | July 10, 2019 11:17 IST
Sridevi

துனுக்குகள்

 • கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி துபாயில் ஸ்ரீதேவி இறந்தார்
 • மதுபோதையில் ஏற்பட்ட விபத்து என வழக்கு முடிக்கப்பட்டது
 • பத்மஸ்ரீ விருது பெற்ற ஸ்ரீதேவி தமிழ்நாட்டின் சிவகாசியில் பிறந்தவர்
80களில் தொடங்கி தமிழ் சினிமாவை மட்டுமல்லாமல் இந்திய சினிமாவையே ஒரு வட்டமிட்டவர் நடிகை ஸ்ரீதேவி. தன்னுடைய ஆற்றல் மிக்க திறமையால் பத்ம ஸ்ரீ விருது பெற்ற மாபெரும் கலைஞர். ஆம், 1967 ஆம் ஆண்டு ‘கந்தன் கருணை' என்ற தமிழ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர், பாரதிராஜாவின் ‘16 வயதினிலே' படத்தின் மூலம் பிரபலமான இவர், இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தன்னுடைய நடிப்புத் திறமையினால் காலம் கடந்தும் நீங்கா இடம் பிடித்த ஸ்ரீதேவியின் வாழ்க்கை கடந்த 2018ம் ஆண்டு இறுதி கோட்டை எட்டியது.

நடிகை ஸ்ரீதேவி அவரது உறவினர் திருமணத்தில் பங்கேற்க கடந்தாண்டு பிப்ரவரி மாதம் துபாய் சென்ற போது, விடுதி அறையின் குளியல் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த செய்தி அறிந்து நாடே சோகத்தில் மூழ்க்கியது. குளியல் அறையில் இருந்த பாத் டப்பில், மது போதையில் மூழ்கி இறந்ததாக செய்திகள் வந்தன.

இந்த இறப்பு விபத்து என்று வழக்கு முடிக்கப்பட்டது. ஸ்ரீதேவி உயிரிழந்து ஓராண்டு கடந்த நிலையில், ஸ்ரீதேவி மரணம் கொலையாக இருக்கலாம் என கேரள மாநில டிஜிபி ரிஷிராஜ்சிங் கூறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தகவலை தனது நண்பரும், பிரபல தடயவியல் நிபுணருமான உமாநாதன் தம்மிடம் பகிர்ந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். ஒரு அடி ஆழமே உள்ள பாத் டப்பில், ஸ்ரீதேவி மூழ்கி இறக்க வாய்ப்பில்லை என்றும், யாராவது அவரை மூழ்கடித்திருக்க வேண்டும் என கூறியதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் ஸ்ரீதேவியின் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் மறைந்திருக்கிறது என பலரும் கூறிவருவதால் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com