முகப்புகோலிவுட்

சீனாவில் ஸ்ரீதேவியின் 'மாம்'

  | February 27, 2019 18:31 IST
Sridevi

துனுக்குகள்

 • 2017 ஆம் ஆண்டு 'மாம்' படம் வெளியானது
 • 'மாம்' படத்திற்காக தேசிய விருது வென்றார் ஸ்ரீதேவி
 • ஸ்ரீதேவி 2018 பிப்ரவரி 24 ஆம் தேதி காலமானார்
இந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டார் ஸ்ரீதேவி என்றால் மிகையாகாது. தென்னிந்திய சினிமா உலகில் தன் நிகரின்றி திகழ்ந்த ஸ்ரீதேவி, ஹிந்தி சினிமா உலகிலும் டாப் ஹீரோயினாக இருந்தார்.

ஹிந்தி தயாரிப்பாளர் போனி கபூரை மணந்த ஸ்ரீதேவி, சினிமாவில் நடிப்பதை குறைத்து கொண்டார். தமிழில் 2015 ஆம் ஆண்டு புலி படத்தில் நடித்தார். ஹிந்தியில் இங்கிலிஸ் விங்கிலிஸ் படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார் ஸ்ரீதேவி.

‘மாம்' என்னும் படத்தில் 2017 ஆம் ஆண்டு நடித்தார் ஸ்ரீதேவி. இந்த படம் ஸ்ரீதேவியின் நீண்ட திரையுலக வாழ்வின் 300 வது படமாகும். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த படம் ஜுலை 7,2017 யில் வெளியானது. விமர்சன ரீதியாகவும் வியாபார ரீதியாகவும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.
2018 பிப்ரவரி மாதம் யாரும் எதிர்பாராத விதமாக ஸ்ரீதேவி இறந்தார். அவர் இறந்த பின், 2017 ஆம் ஆண்டின் சிறந்த நடிகைக்கான தேசிய விருது மாம் படத்திற்காக ஸ்ரீதேவிக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவில் சக்கப்போடு போட்ட மாம் திரைப்படம் சீனாவில் வெளியாகவுள்ளது.

சமீபகாலமாக இந்திய திரைப்படங்களுக்கு சீனாவில் அதிக வரவேற்பு உள்ளது. அமீர்கானின் ‘தங்கல்' திரைப்படம் சீனாவில் கோடிகளை குவித்தது.

இறந்த பின்பும் தன் நடிப்பு திறமையையும் சூப்பர்ஸ்டார் இமேஜையும் யாராலும் நெருங்க கூட முடியாது என ஸ்ரீதேவி நிருபித்துள்ளார்.
 
 
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com