முகப்புகோலிவுட்

ஸ்ரேயா ரெட்டியின் 'அண்டாவ காணோம்' ரிலீஸ் ப்ளான்

  | February 12, 2018 10:50 IST
Sriya Reddy

துனுக்குகள்

  • ‘திமிரு’ படத்தில் வில்லியாக மிரட்டியவர் ஸ்ரேயா ரெட்டி
  • இப்படத்தில் ‘அண்டா’விற்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார் மக்கள் செல்வன்
  • இதன் டிரையிலர் ரசிகர்களிடம் நல்லா வரவேற்பை பெற்றது
தமிழில் விஷாலின் ‘திமிரு’ படத்தில் மிரட்டலான வில்லியாக அறிமுகமானவர் ஸ்ரேயா ரெட்டி. இதனைத் தொடர்ந்து ‘வெயில், பள்ளிக்கூடம், காஞ்சிவரம்’ போன்ற வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தற்போது, ஸ்ரேயா ரெட்டி நடித்துள்ள ப்ரியதர்ஷனின் ‘சில சமயங்களில்’ மற்றும் சி.வேல்மதியின் ‘அண்டாவ காணோம்’ ஆகிய இரண்டு படங்களுமே ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

இதில் ‘அண்டாவ காணோம்’ படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் ‘அண்டா’விற்கு கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி பின்னணி குரல் கொடுத்துள்ளார். அஸ்வமித்ரா இசையமைத்துள்ள இதற்கு ஒளிப்பதிவாளராக பி.வி.ஷங்கர், படத்தொகுப்பாளராக சத்யராஜ் நடராஜன், கலை இயக்குநராக ஏ.கே.முத்து, பாடலாசிரியராக மதுரகவி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். இப்படத்தை ‘JSK ஃபிலிம் கார்ப்பரேஷன்’ நிறுவனம் ஜே.சதீஷ் குமாருடன் இணைந்து ‘லியோ விஷன்’ நிறுவனம் சார்பில் வி.எஸ்.ராஜ்குமார் தயாரித்துள்ளார்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் டீஸர், பாடல்கள் மற்றும் டிரையிலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. படத்தை பார்த்த சென்சார் குழுவினரும் ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனராம். இந்நிலையில், படத்தை வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com